26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு irattai liai mudakkam 2017
 irattai liai mudakkam 2017
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கியது தேர்தல் ஆணையம். சசிகலா, பன்னீர்செல்வம் அணி வாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் 1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

2016-ல் ஜெயலலிதாவுக்கு மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா, பன்னீர்செல்வம் அணி இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர். ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் இரட்டை இலை யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக மீண்டும் ஏப்ரல் 17-ல் தேர்தல் ஆணையம் விசாரணை நடைபெற உள்ளது. எந்த சின்னம் வேண்டும் என்று இருதரப்பும் நாளை காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com